நான் நலமுடன் இருக்கிறேன்: மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் – உருக்கமாக வீடியோ வெளியிட்ட வைகோ.!.

நான் நலமுடன் இருக்கிறேன்: மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் – உருக்கமாக வீடியோ வெளியிட்ட வைகோ.!.

மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலிக்கு சென்ற வைகோ, நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரா் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு சனிக்கிழமை இரவு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், அவரது வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்ற வைகோ, அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தாா். இந்த நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவரது உடல் நிலையை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், சில பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், இன்று புதன்கிழமை வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்தபடியே வைகோ வீடியோ பதிவு ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில், நான் ஏறத்தாழ 7000 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால், கீழே விழுந்ததில்லை. இப்போது நான்கு நாட்களுக்கு முன்பு, நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன். அப்படியே இடது புறமாத சாய்ந்து விட்டேன். இதில் தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. உடனே மருத்துவரிடம் காண்பிக்க உடனே நீங்க சென்னைக்கு போக வேண்டும். அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில், புதன்கிழமை( மே 29) அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.

அறுவை சிகிச்சைக்குப் பின் நான் முன்பு போல் இயங்க முடியுமா என யாரும் சந்தேகப்பட வேண்டாம். தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய குணமடைந்து வருவேன். எனக்காக வருந்தும் உள்ளங்களுக்கு நன்றி என்று வைகோ அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )