
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு சாதனை புாிந்த தூத்துக்குடி திமுக
தூத்துக்குடி:
இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளின் கூட்டணியோடு 543 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். தமிழகத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தல் களத்தில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை சிறப்பு திட்டஅமலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழுமையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தனர்.
அதேபோல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் பல தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அமைச்சர்கள் முழுமையாக எல்லா தொகுதிகளிலும் பணியாற்றியது மட்டுமின்றி மாவட்ட செயலாளர்களும் பல்வேறு அணி பொறுப்பாளர்களும் முழுமையாக களம் இறங்கி பணியாற்றினார்கள். கடந்த 3 ஆண்டுகால முதலமைச்சாின் சாதனைகளை எடுத்துக்கூறி தின்னை பிரச்சாரம் வரை கொண்டு சேர்த்தனர். இதற்கிடையில் ஓவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வாக்களர்களை சந்தித்து வாக்கு சேகாித்ததில் வேட்பாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா காலக்கட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலிருந்து வாகன போக்குவரத்து தடை பட்ட காலத்தில் திமுக துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி சென்னையிலிருந்து தனது வாகனம் மூலம் மாவட்டத்திற்கு வந்து எல்லா தொகுதிகளிலும் முடிந்த வரை மாவட்ட அமைச்சர்களோடு இனைந்து பல்வேறு உதவிகளை செய்தார். இயற்கையாகவே மக்கள் பணியிலிருந்த அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்பாராத கனமழையால் ஏற்பட்ட வௌ்ளத்தின் போது கொேரானா காலக்கட்டத்தையும் கடந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நேரத்திலும் 40 நாட்கள் வாக்களித்த மக்களுக்கு நன்றி உணர்வோடு குறைகளை கேட்டறிந்து எல்லா பகுதிகளுக்கும் உதவிகளை செய்தார்.
இதற்கிடையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளிலும் அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவிகள் செய்து அனைத்து கட்டமைப்புகளையும் முறைப்படுத்தி தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பணிகளை செய்திருந்தார்.
அதே போல் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 தொகுதிகளிலும் எல்லா தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவிகள் செய்து அனைத்து கட்டமைப்புகளையும் முறைப்படுத்தி தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பணிகளை செய்திருந்தார்.
மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவிகள் செய்து அனைத்து கட்டமைப்புகளையும் முறைப்படுத்தி தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பணிகளை செய்திருந்தார்.
இதே போல் விளாத்திகுளம் தொகுதியில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏவும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் சண்முகையா எம்.எல்.ஏவும் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிகளை செய்திருந்தார்கள்.
நடைபெற்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. உள்பட 28பேர் களம் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்ட போது இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மேயர் ஜெகன் பொியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, ஆகியோர் எதிர்த்துநிற்கும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. அதற்கேற்றாற் போல் எல்லோரும் பணியாற்ற வேண்டும். என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் பேசியது மட்டுமின்றி எந்த முறையில் மக்களை அனுக வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டு கனிமொழி மிகப்பொிய வெற்றியை பெறுவதற்கு துணை புாிந்தது மட்டுமின்றி சொன்னது போல் மிக்பொிய ஆலமரமான அதிமுக உள்பட 27 பேர் டெபாசிட் இழந்தனர்.
அதிலும் குறிப்பாக 6 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளில் 52 வார்டுகள் உள்ளடக்கிய தூத்துக்குடி தொகுதியில் ஓரு வார்டுக்கு 2 ஆயிரம் வாக்குகள் வீதம் 1லட்சத்து 4 ஆயிரம் வாக்குகளை பெற்று தூத்துக்குடி முதலிடத்தை தட்டி சென்ற பெருமை கீதாஜீவனுக்கும், திருச்செந்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை தட்டி சென்ற பெருமை அனிதா ராதாகிருஷ்ணனுக்கும். கிடைத்துள்ளது.
மாவட்ட மக்களின் நிறைகுறைகளை எளிய முறையில் கேட்டறிந்து பணியாற்றிய காரணத்தால் அனைவரும் டெபாசிட் இழக்கும் நிலைமைக்கு சென்றுள்ளனர். ஓட்டுமொத்த மாவட்ட திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு பெருமையை தேடி கொடுத்துள்ளனர்.