உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற இளம்பெண்-  கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்

உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற இளம்பெண்- கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்

மதுரை மாவட்டத்திலுள்ள மேல சக்குடி பகுதியில் ரவிசங்கர் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக இருப்பதால் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்று விடுவார். இவருக்கு ஜெயந்தி (24) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். ஜெயந்தி கட்டிட சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் திடீரென மாயமானார். அவரை கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மதுரை சிலைமான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து ஜெயந்தியை தேடி வந்தனர். இந்நிலையில் வீரகனூர் ஆற்று பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலம் கிடந்தது போலீசார் விசாரணையில் உயிரிழந்தது ஜெயந்தி என்பது தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல் :

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கட்டிட வேலைக்கு கொத்தனாரான கருப்பையா என்பவர் ஜெயந்தியை அடிக்கடி அழைத்து சென்றுள்ளார். இருவரும் வேலைக்கு ஒன்றாக சென்றபோது பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில் தங்களுடைய கள்ளக்காதலை வளர்ப்பதற்காக கருப்பையா செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

கள்ளக்காதலன் சந்தேகம்:

சமீபகாலமாக கருப்பையா செல்போனுக்கு தொடர்பு கொண்ட போதெல்லாம் ஜெயந்தியின் போன் பிசி என்று வந்துள்ளது. இதனால் தான் வாங்கிக் கொடுத்த செல்போனில் தன்னிடம் பேசாமல் வேறு யாரிடமோ ஜெயந்தி பேசுவதாக அவர் சந்தேகம் கொண்டவர், தன்னுடைய நண்பரான ஜெயகாந்தன் என்பவருடன் சேர்ந்து ஜெயந்தியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி சம்பவ நாளில் இரவு நேரத்தில் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி கருப்பையா ஜெயந்தியை அழைத்துள்ளார். இதை நம்பி ஜெயந்தி அங்கு சென்ற நிலையில் ஜெயகாந்தன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சேர்ந்து ஜெயந்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கேயே சடலத்தை போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயகாந்தன் மற்றும் கருப்பையா இருவரையும் கைது செய்துள்ளனர்.

கணவனுக்கு துரோகம் செய்தால்:

கணவனை ஏமாற்றி கள்ளக்காதலனுடன் கள்ள உறவில் இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )