பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு : அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.3,680 கோடியும், உயர்கல்வி உதவித் தொகைக்காக ரூ.1,580 கோடி நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 150 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறைக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.1,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.10,067 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இ- சேவை மையங்களில் 500க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் வழங்கப்படும் என்றார். புதுவாழ்வு திட்டம் 4,174 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரூ.20,000 ஆக உயர்தப்படும் என்றார்.