தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஒப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சந்தித்து மனுக்கள் தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கு அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வெற்றிவேல்புரம், மேட்டுப்பட்டி, சங்குகுளி ​​காலனி, ராஜீவ் காந்திநகர் கிருஷ்ணராஜபுரம் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் புதிய வழித்தடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வரும் பேவர் பிளாக் பணிகளையும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தெற்கு புதுத்தெரு பகுதியில் புதிய தார்சாலை அமைத்து கொடுக்கப்பட்ட பணிகளுக்காகவும் மீகா தெரு தெற்கு புதுத்தெரு பகுதிகளுக்கு சீரான குடிநீரை வழங்குவதற்காக புதிய வழித்தடத்தில் குழாய் பதித்து குடிநீர் வழங்கியதற்காகவும் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா கவுன்சிலர் மும்தாஜ், நன்றி தொிவித்துக்கொண்டனர்.

ஆய்வின்போது மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், வட்ட பிரதிநிதி மார்ஷல், நிர்வாகிகள், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )