பொது இடங்களில் அசுத்தம் செய்தால் ரூ 5000 அபராதம்: உத்திரகாண்ட் அரசு
பொது இடங்களில் எச்சில் துப்பியோ அல்லது குப்பைகள் கொட்டியோ அசுத்தம் செய்தால் ரூ 5000 அபதாரம் அல்லது 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என .உத்திரகாண்ட் அரசு எச்சரித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்திரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்வராக திரிவேந்திரசிங் ரவாத் பதவியேற்றுள்ளார். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் தலைநகர் டேராடூனில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களுக்கு அபதாரமாக ரூ 5000 அல்லது 6 மாதம் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சுகாதார ஆய்வாளர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருப்பார்கள். யாராவது அசுத்தம் செய்பவர்கள் தென்பட்டால் அவர்களிடம் இருந்து ‛‛ஸ்பாட் பைனா” ரூ 5000 வரை வசூலிக்கப்படும் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.