ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பார்லி., நிலைக்குழு சம்மன்
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு விவகாரம் தொடர்பாக, மீண்டும் விளக்கம் கேட்க, ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சம்மன் அனுப்ப, நிதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, முடிவு செய்துள்ளது.
சம்மன்:
இது குறித்து நிலைக்குழுவின் தலைவரும், காங்கிரசை சேர்ந்தவருமான, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? செல்லாத ரூபாய் நோட்டுக்கு மாற்றாக, புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? என்பது உட்பட, பல விளக்கங்களை கேட்க வேண்டியுள்ளது.
இதற்காக, ஏப்ரல் 20ல், பார்லி., நிலைக்குழு முன் ஆஜராக, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு, சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.