Breaking News
போலந்தில் இந்திய மாணவர் மீது தாக்கு

போலந்தில் இந்திய மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கப்பட்ட மாணவர் பற்றிய விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

படுகாயம்:

இது தொடர்பாக அந்த மாணவரின் நண்பர் அமித் அக்னிகோத்ரி என்பவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: கடந்த புதன் கிழமை அன்று சாலையில் நானும், எனது நண்பரும் நடந்து சென்றோம். அப்போது சிலர் பின்னால் வந்து நண்பரை, கோஷம் எழுப்பியவாறு கடுமையாக தாக்கினர். அவருக்கு தலை, முகம் கை, காலில் காயம் ஏற்பட்டது. அதிகளவில் ரத்தம் வெளியேறியது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது இனவெறி தாக்குதல் போன்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விசாரணை:

இது பற்றி தகவலறிந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, அந்நாட்டிற்கான தூதர் அஜய் பிசாரியாவிடம் அறிக்கை கோரியுள்ளார். அவரிடம் தொலைபேசி மூலம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
டுவிட்டரில் சுஷ்மா கூறியதாவது: தாக்குதல் சம்பவம் வருத்தமளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்பிழைத்து கொண்டார். அனைத்து கோணங்களிலும் விசாரணைநடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.