
3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதித்த ரிசா்வ் வங்கி
நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தனலக்ஷ்மி வங்கி, பஞ்சாப் – சிந்து வங்கி உள்ளிட்ட 3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதிப்பதாக ரிசாவ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுதொடாபாக ஆபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடன்கள் மற்றும் முன்பணம், சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக தனலக்ஷ்மி வங்கிக்கு ரூ.1.20 கோடியும் பஞ்சாப் – சிந்து வங்கிக்கு ரூ.1 கோடியும் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் வாடிக்கையாளார்களின் சேவைகளை முறையாக பின்பற்றாததால் ISEF சிறு நிதி வங்கிக்கு ரூ.29.55 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2.49 கோடி அபராதம் விதித்த ரிசாவ்நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக மட்டுமே மேற்கூறப்பட்டுள்ள வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவை வாடிக்கையாளா்களுடன் ஈடுபட்டுள்ள பணப் பரிவாத்தனைகளை பாதிக்கும் என்றும் விதிக்கப்படவில்லை எனவும் ஆா்பிஐ தெரிவித்தது.