இந்தியாவை விட்டு சீனா பக்கம் சாய்ந்தால் மாலத்தீவு என்ன ஆகும்?

இந்தியாவை விட்டு சீனா பக்கம் சாய்ந்தால் மாலத்தீவு என்ன ஆகும்?

வாக்காளர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வை உண்மையிலேயே வலுப்படுத்தியுள்ளது. இதுவே இளம் அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படையாக வெளியிட ஊக்குவித்திருக்கலாம்,” என்று மாலத்தீவு அரசியல் பகுப்பாய்வாளர் அசிம் ஜாகிர் கூறினார்.

இந்தியா மற்றும் மோதி பற்றிய “மரியாதை இல்லாத” கருத்துக்களை மாலத்தீவு மக்கள் பலர் நிராகரிப்பதாகக் கூறினாலும், டெல்லியால் எடுக்கப்படும் எந்தவொரு கட்டாய ராஜதந்திர நடவடிக்கையும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

” முய்சுவை சீனா அல்லது இந்தப் பகுதியில் உள்ள வேறு ஒரு சக்தியை நோக்கி மேலும் தள்ளக்கூடும்” என்று ஜாகிர் கூறினார்.

முன்னாள் மூத்த இந்திய தூதர் நிருபமா மேனன் ராவ், சமூக வலைதளங்களில் பொருளாதார புறக்கணிப்பு கோரிக்கைகள் எழும்போது மாலேவுக்கு டெல்லி நேர்மறையான உறுதி அளித்திருக்க முடியும் என்று கூறினார்.

“இங்கேதான் இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர்கள் தலையிட்டு, பெரிய,அவசியமான பாதுகாப்பு மற்றும் நலன்களை மனதில் வைத்து சரியான திசையில் இட்டுச் செல்ல வேண்டும். மாலத்தீவு நமது கியூபா அல்ல,” என்று அவர் X தளத்தில் எழுதியிருந்தார்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )