தேர்தல் ஆணையத்தில் 17-ம் தேதி விசாரணை: அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் யாருக்கு?
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை பெறு வதற்கான முயற்சியில் அதிமுக வின் இரு அணிகளும் தீவிரமாகி உள்ளன.
அதிமுகவின் பொதுச்செய லாளராக சசிகலா தேர்வு செய் யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த னர். இதையடுத்து, சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் கடிதம் மூலமும் நேரிலும் விளக்கம் பெற்றது.
இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை யார் பெறுவது என்ற போட்டி ஏற்பட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி, தேர்தல் ஆணை யம் இரு தரப்பையும் அழைத்துப் பேசியது. இறுதியாக இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது. அதிமுக கட்சிப் பெயர், கொடியை பயன்படுத்தவும் இரு தரப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெவ்வேறு கட்சிப் பெயர், சின்னங்களில் போட்டியிடும்படி இரு பிரிவினரை யும் தேர்தல் ஆணையம் கேட் டுக் கொண்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்தபின், பிப்ரவரி 17-ம் தேதி மீண்டும் இரு தரப்பும் ஆஜராக வேண் டும் என்றும், அதன்பிறகே கட்சி, சின்னம் தொடர்பாக முடி வெடுக்கப்படும் எனவும் அறிவித் தது.
தேர்தல் ஆணைய அறிவிப் பின்படி, சசிகலா அணி ‘அதிமுக அம்மா கட்சி’ என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும் ஓபிஎஸ் அணி ‘அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி’ என்ற பெயரில் இரட்டை விளக்குகள் கொண்ட மின்கம்பம் சின்னத்திலும் தேர் தலை சந்தித்தன. ஆனால், பணப் பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகரில் இன்று நடக்க விருந்த தேர்தல் ரத்து செய்யப் பட்டது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 1 மணி அளவில், அதிமுக அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந் தார். அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்க மணி, எஸ்.பி.வேலுமணி உள் ளிட்ட அமைச்சர்கள், ஆர்.வைத் திலிங்கம் உள்ளிட்ட எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், பல் வேறு பிரிவுகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வருமான வரித் துறை சோதனை, அது தொடர்பாக வெளி யிட்ட ஆவணங்கள், இடைத் தேர்தல் ரத்து உள்ளிட்ட விஷயங் கள் குறித்து கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. மேலும், வரும் 17-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் ஆஜராக வேண்டியுள்ளதால், அதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட் டது. இக்கூட்டம் முடிந்ததும் முதல்வர், அமைச்சர்கள் உள் ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதேபோல, ஓபிஎஸ் தலை மையில் நிர்வாகிகள் நேற்று கட்சி, சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சசிகலா அணியைப் பொறுத்த வரை, ஆர்.கே.நகர் தேர்தல் பிரச் சாரத்துக்கு வந்திருந்த நிர்வாகி கள் மூலம் கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு பேசினர். அந்தந்த பகுதிகளில் உள்ள தொண்டர் களை சந்தித்து அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதம் பெற வலியுறுத்தினர். அவ்வாறு பெறப்பட்ட கடிதங்கள், தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும்போது சமர்ப்பிக்கப்படுகிறது.
ஓபிஎஸ் அணியைப் பொறுத்த வரை ஏற்கெனவே 40 லட்சம் பேருக்குமேல் தங்களுக்கு ஆத ரவு இருப்பதாக தேர்தல் ஆணை யத்திடம் கடிதம் அளித்துள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக் கும் முயற்சியில் அந்த அணியும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.