
இந்து அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன
தூத்துக்குடி, இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் போதிய கால இடைவெளி தற்போது இருக்கும்போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த பணியிடத்திற்கு, இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:
பணியிடம்: ஓட்டுநர்
இன சுழற்சி ஒதுக்கீடு முறை: பொதுப்போட்டி
எண்ணிக்கை : 1
ஊதிய விகிதம்: ரூ. 19500 – ரூ.62000
தகுதிகள்: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; இலரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்; நல்ல உடல் தகுதியுடன் இருக்கவேண்டும்.
பணியிடம்: அலுவலக உதவியாளர்
இன சுழற்சி ஒதுக்கீடு முறை: ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு பொதுப்போட்டி – முன்னுரிமை பெற்றவர்;
ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் – அருந்ததியர் – ஆதர்வற்ற விதவை – முன்னுரிமை பெற்றவர்;
ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் – முன்னுரிமை பெற்றவர்.
எண்ணிக்கை : 3
ஊதிய விகிதம்: ரூ. 15700 – ரூ.50000
தகுதிகள்: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியிடம்: இரவுக் காவலர்
இன சுழற்சி ஒதுக்கீடு முறை: பொதுப்போட்டி
எண்ணிக்கை: 1
ஊதிய விகிதம்: ரூ. 15700 – ரூ.50000
தகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சியின்மை; மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் நல்ல உடல் தகுதியுடனும் இருத்தல் வேண்டும்
மேற்கூறிய தகுதியுள்ள ‘இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்’ 17.01.2024 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கீழ்காணும் ஆவணங்களின் நகல்களில் சான்றிட்டும், புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25/- க்கான தபால் தலை ஒட்டிய உறை ஒன்றுடன் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான/பெறாததற்கான கல்வி சான்றுநகல்
ஓட்டுநர் உரிமம்
பள்ளி மாற்று சான்று நகல்
சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)
தூத்துக்குடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகல்
குடும்ப அடையாள அட்டை நகல்
இன சுழற்சி முறைக்கு உரிய சான்றின் நகல் (Community Certifcate)
இதர தகுதிகள் எதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள்
சுயவிலாசமிட்டு ரூ.25/- க்கான தபால் தலை ஒட்டிய உறை-1.
விண்ணப்பபடிவத்தினை இணை ஆணையர் அலுவலக விளம்பர பலகை மற்றும் TNHRCE website – ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 35/1A, மேலரதவீதி, தூத்துக்குடி – 628 002 ஆகும்.