பிரிபடாத கூட்டு குடும்ப சொத்துக்களில் கூட்டு பங்குதாரர்களுக்கு தனது பங்கினை தானமாகவோ அல்லது செட்டில்மென்டாகவோ எழுதினால் அது செல்லுமா?

பிரிபடாத கூட்டு குடும்ப சொத்துக்களில் கூட்டு பங்குதாரர்களுக்கு தனது பங்கினை தானமாகவோ அல்லது செட்டில்மென்டாகவோ எழுதினால் அது செல்லுமா?

வாதி தாவா சொத்தில் ஒரு பகுதியானது தனது தந்தைக்கு பிதுராஜித வகையில் கடந்த 5.9.1955 அன்று தனது தந்தை/ 1ம் பிரதிவாதி மற்றும் அவரது சகோதரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட பாகப்பிரிவின் அடிப்படையில் பாத்தியப்பட்டது என்றும் மீதமுள்ள சொத்துக்கள் மேற்படி பாகப்பிரிவினை அடிப்படையில் வந்த சொத்துக்களின்  வருமானத்தின் அடிப்படையில் வாங்கப்பட்ட சொத்துக்கள் ஆகும். வாதியின் தந்தை மேற்படி சொத்துக்களை இரண்டாம் பிரதிவாதியான தனது மகனுக்கும் அவரது மகன்களுக்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் எழுதி வைத்துள்ள நிலையில் மேற்படி சொத்துக்களில் வாதியும் ஒரு பங்குதாரர் என்பதால் அவரது சம்மதம் இல்லாமல் கர்த்தானவர் எந்த ஒரு பங்குதாரருக்கும் தானமோ செட்டில்மெண்டோ செய்ய இயலாது என்றும் ஆதலால் மேற்படி செட்டில்மெண்டுகள் செல்லாது என்றும் தனக்கு சொத்தில் மூன்றில் ஒரு பங்கு உள்ளதாக பாகம் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

*வழக்கு விவரம்:*
வாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த விசாரணை நீதிமன்றம் 2004 ஆம் ஆண்டிற்கு முன்பு செட்டில்மெண்ட் செய்து விட்டதால் பெண்களுக்கு இந்து வாரிசுரிமை திருத்த சட்டம் 2005 அடிப்படையில் உரிமை வருவதற்கு முன்பே இந்த செட்டில்மெண்ட் செய்து விட்டதால் வாதி பாகம் கோர இயலாது என்று குறிப்பிட்டு வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதனை எதிர்த்து வாதியால்  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவான *கலாவதி -எதிர்- ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் 3 நபர்கள்* என்ற வழக்கில்  உயர்நீதிமன்றம் வாதி தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதமான கூட்டு பங்குதாரரின் அனுமதி இன்றி கூட்டு பங்கு சொத்துக்களில் எந்த நபருக்கும் அந்த சொத்து குறித்து தானம் மற்றும் கிரையம் எழுத இயலாது என்றும் அவ்வாறு எழுதினால் அது செல்லாது என்றும் குறிப்பிட்டு அதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் *தமன்னா வெங்கடசுப்பம்மா _எதிர்_ தமன்னா ராட்டன்ன மற்றும் பலர்* என்ற வழக்கினை மேற்கோள்காட்டி தானம் மற்றும் செட்டில்மெண்ட் செல்லாது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )