ஜாதவ் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட் தடை
உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட் தடை விதித்துள்ளது.
மரண தண்டனை:
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை மாஜி அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் ஜாதவை மீட்க எந்த எல்லைக்கும் செல்வோம் என பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்திருந்தது. அத்துடன் ஜாதவை விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
தடை:
இந்நிலையில் மரண தண்டனையை ரத்து செய்ய இந்தியா கோரிய மனுவை பரிசீலித்த சர்வதேச கோர்ட், ஜாதவிற்கு பாக்., விதித்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பானது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.