சரக்கு சேவை வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்; அனைத்திந்திய சிட்பண்ட் நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை
சரக்கு சேவை வரி விதிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதன்மூலம் இந்திய பொருளாதாரம் வலுவானதாக மலரும். என்றாலும் சீட்டு நிதி நிறுவனங்கள் மீது விதிக்கப்படுவதற்கு முன்மொழியப்படும் 12 சதவீத வரியானது இத்தொழில் துறையினருக்கு கவலையை உருவாக்கி உள்ளது. நடைமுறையில் உள்ள 10.5 சதவீதத்தை, சரக்கு சேவை வரியாக விதித்தாலும் அது சிரமத்தை ஏற்படுத்தும்.
எங்களது மொத்த வருமானமே சீட்டு மதிப்பின் 5 சதவீத தொகை தான். எனவே சரக்கு சேவை வரியை 5 சதவீதமாக குறைத்தால் தான் அது சீட்டு நிதி நிறுவனங்கள் வளர வழிவகுக்கும். எனவே சரக்கு சேவை வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதே கோரிக்கையை சிட்பண்ட் நிறுவனங்கள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் சிற்றரசு வலியுறுத்தி இருக்கிறார். அவர் கூறுகையில், ‘‘வங்கிகளில் கணக்கில்லாத அல்லது குறைந்த கணக்கு செயல்பாடு உள்ள மக்களிடம் இருந்து பெறப்படும் சேமிப்பு தொகைக்கு அதிக வரி விதிப்பது நியாயம் ஆகாது. எனவே சரக்கு சேவை வரியை குறைக்க வேண்டும்’’ என்றார்.