மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடிக்கு “இந்திய சாதனையாளர் விருது

மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடிக்கு “இந்திய சாதனையாளர் விருது

மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியின் பல நெருக்கடியான சூழ்நிலையிலும் கடந்த 30 ஆண்டு காலமாக சிறந்த சேவையை செய்து வருவதை பாராட்டி ” இந்திய சாதனையாளர் விருதினை” நீதியரசர் கே. வெங்கடேசன் வழங்கி வாழ்த்தி பாராட்டு பேசினார்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஏழை, எளிய, மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும்,குழந்தைகளை கல்வி வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும், மாற்றுதிறனாளின் வாழ்விற்காகவும், மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு கோடி பனை விதை நடு பணியிலும், 10 லட்சம் விதை பந்துகள் விதைக்கும் பணியிலும், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியிலும், மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல், சுகாதாரம், பொது சுகாதாரம், கல்வி, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், போன்ற பல்வேறு முகாம்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். டாக்டர் எஸ் ஜே கென்னடியின் சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தி, பாராட்டும் விதமாக குளோபல் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் பாரத் வித்யா பவனில் நடந்த விழாவில் மாண்புமிகு நீதியரசர் டாக்டர் கே. வெங்கடேசன் மதர் சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு “இந்திய சாதனையாளர் விருதினை” வழங்கி பாராட்டி, வாழ்த்தி பேசினார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் முன்னாள் சிறப்பு கமிஷனர் கே.சம்பத்குமார் இ ஆ ப, மனித உரிமை கமிஷன் உறுப்பினர் டாக்டர் ஏ.சி. மோகன்தாஸ் இ ஆ ப, சி ஆர் பி எப் ஆய்வாளர் டி. சேகர், முன்னாள் டெப்டி கமிஷனர் எம்.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு விருது பெற்ற டாக்டர் எஸ் ஜே கென்னடி யை பாராட்டி, வாழ்த்தி பேசினர். விழாவில் மனுவேல், ஜெய மகேஷ், விவின், வளர்மதி, சுபாஷி சாகா, இராமச்சந்திரா, மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விருது பெற்ற டாக்டர் எஸ் ஜே கென்னடியை நீதிபதி ராமலிங்கம், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், தாசில்தார் லெனின், வழக்கறிஞர் சதீஷ் பாலன், பஞ்சாயத்து தலைவர்கள் அங்கமங்கலம் பானுப்பிரியா பாலமுருகன், சேதுக்கு வாய்தான் சுதா சீனிவாசன், கட்டாலங்குளம் தம்பா, இராஜபதி சௌந்தரராஜன், தொழில் அதிபர்கள் ராம்குமார், செல்வகுமார், மற்றும் சமூக ஆர்வலர்கள், நண்பர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்


 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )