
தமிழக அரசின் 2024 – 2025ம் ஆண்டிற்கான பட்ஜெட் எப்படி உள்ளது.?. தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் கருத்துக்கள் என்ன.?.
1. தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் மின்வெளித் தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது
2. தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 5 மாநகரங்களில் நியோ டைடல் பூங்கா அமைக்கப்பட இருப்பதும், இதன் மூலம் 13000 பேருக்கு வேலைவாய்ப்பு அமைய இருப்பதும் வரவேற்கத்தக்கது
3. ரூ.500 கோடியில் 5000 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை புனரமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது.
4. ரூ.365 கோடியில் 2000 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கபபடவிருப்பது வரவேற்கத்தக்கது.
5. சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1557 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது
6. இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது
7. ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்வி கடன் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.
8. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.20198 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
9. 4.0 தரத்தில் 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது.
10. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.44042ஃ- கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
11. முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
12. கோவையில் ரூ.20 லட்சம் சதுர அடியில் ரூ.1100 கோடி செலவில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.
13. மதுரையில் ரூ.345 கோடியிலும், திருச்சியில் ரூ.350 கோடியிலும் டைடைல் பூங்காக்கள் அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.
14. இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.
15. விருதுநகர், சேலம் நகரங்களில் ரூ.2483 கோடியில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
16. துறைமுகங்களை மேம்படுத்தும் விதமாக சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.24000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
17. கடற்கரை மாவட்டங்களில் தூண்டில் வளைவுகள் மற்றும் மீன் இறங்கு தளங்களை அமைக்க ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
மொத்தத்தில் தமிழக அரசின் பட்ஜெட் (2024 – 2025) வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் T.R.தமிழரசு கருத்து தெரிவித்தார்.