
காயல்பட்டினத்தில் வருகின்ற 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் என்.எல்.சி., அனல்மின் நிலையம் சி.எஸ்.ஆர் திட்டத்தின் உதவியுடன் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் 25-02-2024 , ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை காயல்பட்டி பள்ளினம் குத்துக்கல் தெருவிலுள்ள முஹ்யித்தீன் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. .
இம்முகாமிற்கு வரும்போது உங்கள் முகவரி சானின் ஜெராக்ஸ் (வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு, செல் நம்பர்) கொண்டு வரவும்
கண்புரை : நோயாளிகள் முகாம் தினத்தன்றே திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைசிகிச்சை, மருத்துவம், தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் இலவசம். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து : பிரச்சனை உள்ளவர்களுக்கு கண் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் கண்ணாடிகள், மருந்துகள் முகாம் நடத்தும் இடத்திலேயே கிடைக்கும்.
கண்புரை நோயாளிகள் கவனத்திற்கு
உயர் இரத்த அழுத்த நோய், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால், அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்து தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமிற்கு வர வேண்டும். மேலும் சேலை, வேஷ்டியுடன் வரவும். அனைவரும் அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்
SAKசெய்யது மீரான் 90254 60448
MY ஜெஸ்முதீன் 97912 18972
TML முஹிய்யித்தீன் அப்துல் காதர் 85259 29605
எஸ்.எம்.முஹம்மது சமீம் 95974 46736
இறையருள் யூசுப் சாஹிப் 9384133945