தூத்துக்குடியில் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி- போலீசுக்கு கத்திக் குத்து

தூத்துக்குடியில் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி- போலீசுக்கு கத்திக் குத்து

தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் உள்ள தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது, அதில் இன்று அதிகாலை 3 மணியளவில், மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, கனரா வங்கி தலைமை அலுவலகத்திற்கு அலாரம் ஒலிக்கவே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த கொள்ளையன் தான் கையில் வைத்திருந்த கத்தியால் காவலரை தாக்கியுள்ளார். இதில் காவலர் காயமடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் ஏடிஎம் மெஷின் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். காயமடைந்த காவலரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசாரின் விசாரணையில் செந்தில் என்று மட்டும் பெயர் கூறுகிறார். மற்ற விபரங்களை கூற மறுத்துள்ளார். கையில் கத்தியுடன் பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் விசாரணை நடத்துவதில் போலீசார் தயக்கம் அடைந்துள்ளனர். அவர் உண்மையிலே மனம் பாதிக்கப்பட்டவர்தானா? அல்லது போலீஸ் விசாரணைக்காக நடிக்கிறாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )