
தூத்துக்குடியில் காலை வெட்டிக் கொண்ட அதிமுக தொண்டருக்கு எடப்பாடி ஆறுதல்
தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தூத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் வயது 75, பந்தயம் கட்டியிருந்தார். ஆனால் அதிமுக ஓரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்ததையொட்டி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி தனது காலில் கத்தியால் வெட்டி ரத்தத்தை சிந்தி வாக்குறுதியை நிறைவேற்றினார். இதனயைடுத்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிகட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனை தொடர்பு கொண்டு அதிமுக தொண்டரை அழைத்துக்கொண்டு சேலத்திற்கு வருமாறு கூறியிருந்தார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செல்வகுமாரை அழைத்து சென்று சேலம் நெடுஞ்சாலை நகாலில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் சந்தித்தனர். அதிமுகவிற்கு எதிர்காலம் இருக்கிறது. என்று தொண்டருக்கு ஆறுதல் கூறி உதவி செய்தார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டதிற்கிணங்க அதிமுக தொண்டரை அழைத்து வந்து சந்தித்தோம். அப்போது பல்வேறு அறிவுரைகளை வழங்கியது மட்டுமின்றி நடைபெற்று முடிந்த தேர்தல்கள் குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி வரும் 2026ல் பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுங்கள் பொதுமக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கு உழைக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார் என்று கூறினார்.
தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க மண்டலத்தலைவர் பேச்சியப்பன், தெற்கு மாவட்ட வடக்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிஐவு ராஜன், மற்றும் விக்னேஷ் பாண்டியன், ஆகியோர் சந்திப்பின் போது உடனிருந்தனர்.