வார்தா புயல் நாளை அந்தமானை தாக்குகிறது…. சென்னையையும் மிரட்டுகிறது!

1

வங்கக் கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் அந்தமானை நாளை தாக்கும். இதனால் சென்னைக்கும் புயல் ஆபத்து உள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தாக்குகிறது. இப்புயல் சென்னையையும் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

vardha-cyclone

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் புயலாக மாறுகிறது. இதற்கு வார்தா என பெயரிடப்பட்டுள்ளது.

இப்புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளை முதலில் தாக்குகிறது. அப்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இப்புயலால் அந்தமான் தீவுகளில் 25 செமீ மழை பெய்யக் கூடும்.

அந்தமான் தீவுகள் நிலச்சரிவு உள்ளிட்ட பெரும் சேதங்களை எதிர்கொள்ள நேரிடக் கூடும். இதையடுத்து வார்தா புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே 11 மற்றும் 12-ந் தேதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 100 முதல் 130 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்.

வார்தா புயலால், சென்னை 11,12-ந் தேதிகளில் மிக பலத்த மழையை எதிர்கொள்ளக் கூடும். புயல் பாதை இதுதான் என நிச்சயமாக தெரியாத நிலையில் தொடர்ந்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

About Author

1 Comment

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.