Breaking News
புதுடெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திருடிகளுக்கு உதவிசெய்த போலீஸ் கான்ஸ்டபிள்

புதுடெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திருடிகளுக்கு உதவிசெய்த போலீஸ் கான்ஸ்டபிள் சிசிடிவி கேமராவில் சிக்கினார். கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

டெல்லியின் சாவ்ரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் பெண்கள் கூட்டத்திற்கு போலீஸ் கான்ஸ்டபிள் உதவிசெய்த சம்பவம் வெளியே தெரியவந்து உள்ளது. பாதுகாப்பு பணியில் இருக்கும் கான்ஸ்டபிள் ஒருவர் கொள்ளை கும்பலிடம் ஏதே ஒரு பொருளை வாங்கி வைத்துக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் அடங்கிய செய்தியானது ஆங்கிலப்பத்திரிக்கையில் வெளியாகியது.

இந்தியாவிற்கு சுற்றாலா வந்த அமெரிக்க பெண் தன்னுடைய நகைகள் மற்றும் உயர் மதிப்புடைய பிற பொருட்கள் திருட்டு போய்விட்டது என்று புகார் கொடுத்தது தொடர்பாக திருட்டு தொழிலில் ஈடுபட்ட பெண்கள் கூட்டத்தை போலீஸ் கைது செய்தது. ரெயிலில் அமெரிக்க பெண் தன்னுடைய கணவருடன் ‘செல்பி’ எடுத்த போது இருபெண்கள் அவர்களுக்கு பின்னால் நின்று உள்ளனர். அவர்களும் செல்பியில் இடம்பெற்று உள்ளனர். இதனை கொண்டு போலீஸ் விசாரணை செய்தபோது இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். இரு பெண்களும் 6 பெண்கள் அடங்கிய கும்பலில் தொடர்பு உடையவர்கள் என்பது தெரியவந்தது. இந்த கும்பலிடம் இருந்தே போலீஸ் கான்ஸ்டபிள் மர்ம பொருளை வாங்கி பைக்குள் வைக்கும் காட்சியும் இடம்பெற்று இருந்தது.

இதனையடுத்து போலீஸ் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியது. விசாரணையை அடுத்து டெல்லி போலீஸ் மெட்ரோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள சிஐஎஸ்எப்பிடம் கூடுதல் சிசிடிவி காட்சிகளை கேட்டுக் கொண்டு உள்ளது. இதுபோன்ற திருட்டு கும்பல்களுக்கு கான்ஸ்டபிள் உதவினாரா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி போலீஸ் அதிகாரி பேசுகையில், “சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மூத்த கான்ஸ்டபிள் உதவி செய்யப்பட்டு உள்ளார். சிசிடிவி காட்சியில் அவருடைய முகமானது தெளிவாக இடம்பெறவில்லை, ஆனால் நாங்கள் அவரை அடையாளம் கண்டு உள்ளோம். அவர் சந்தேகத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டு உள்ளோர், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மற்ற பணியாளர்களும் இதில் இடம்பெற்று இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறிஉள்ளார்.

டிசம்பர் 13-ம் தேதி 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களிடம் இருந்து 22 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கான்ஸ்டபிளிடம் இந்த பெண்கள் மர்ம பொருட்களை ஒப்படைக்கும் இருகாட்சிகள் வெளியாகி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.