ஸ்ரீவைகுண்டம் அருகே காணாமல் போனவரை கண்டு பிடித்து மீட்ட தனிப்படை போலீசார் – குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே காணாமல் போனவரை கண்டு பிடித்து மீட்ட தனிப்படை போலீசார் – குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

 

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடி தேரடி தெருவை சேர்ந்த முருகன் மகன் கணேசன் (36) என்பவர் கடந்த 17.11.2023 அன்று குடும்ப பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தினர் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

இதுகுறித்து கணேசன் மனைவி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுத்தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், கணேசன் என்பவரை கண்டுபிடிக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரெடரிக் ராஜன் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமைக் காவலர்கள்  மணிகண்டன், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் (மற்றொரு)  மணிகண்டன், ஏரல் காவல் நிலைய தலைமை காவலர் காசி மற்றும் காடல்குடி காவல் நிலைய காவலர் பிரபுபாண்டியன்  ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து  உத்தரவிட்டார்.

தனிப்படையினர் 3 மாதங்களாக தேடி வந்த நிலையில், காணாமல் போன கணேசனை கண்டுபிடித்து திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வைத்து பத்திரமாக மீட்டு நேற்று அவரது குடும்பத்தினரும் ஒப்படைத்தனர்.

காணாமல் போனவரை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )