
தூத்துக்குடியில் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் “இலக்கியம் பூக்கும் இனிய மாலை 261”
தூத்துக்குடியில் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் “இலக்கியம் பூக்கும் இனிய மாலை 261” காரப்பேட்டை நாடாா் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடியில் 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை காரப்பேட்டை நாடாா் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ் இலக்கியப்பேரவைத் தலைவர் துரைகணேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், செய்யது முகமது ஷொப் வரவேற்புரையாற்றினாா்.
கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மதிவாணன், சமரச சன்மாா்க்கம கண்ட வள்ளலாா் என்ற தலைப்பில் பேசினாா். தமிழ் பேராசிய்யா ஜகந்நாதன் புரட்சித்துறவி ராமானுஜா என்ற தலைப்பில் பேசினாா். ஆதிஅருமைநாயகம் நன்றியுரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தூத்துக்குடி தமிழ் இலக்கியப்பேரவை சிறப்பாக செய்திருந்தனர்.
CATEGORIES மாவட்டம்