
தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட்நகர் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பாக ரூபாய் 31.29 கோடி மதிப்பீட்டில் 100 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. அதன்படி இன்று (19.02.2024) மேற்படி பிரையண்ட்நகர் பகுதியில் காவலர் குடியிருப்பு கட்டப்பட உள்ள இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர். கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா , தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக நிர்வாக பொறியாளர் அரவிந்த் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.