
தமிழக பட்ஜெட் 2024-25 என்பது மீனவர்களுக்கு எதிரானது-தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் மீனவர்களின் கடற்கரைகள் சுற்றுலாத்தலங்கள் ஆகிறது. திமுக மீனவர்களையும், மீனவர் வாழ்விடங்களையும் அழிக்க பார்க்கிறது.
மீனவர்கள் பல்வேறு திட்டங்களை அரசிடம் கொடுத்துள்ளோம். ஆனால் அதில் ஒன்றை கூட தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை.
தேர்தலில் திமுக அறிவித்த மீனவர் திட்டங்கள் கூட அறிவிக்கவில்லை. ஆனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரை முழுவதையும் சுற்றுலா தளமாக்க திமுக அரசு முயற்சி செய்கிறது. இது மீனவர்களுக்கு எதிரானது.
எனவே, இந்த பட்ஜெட் மீனவர்களுக்கு எதிரானது என தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி தெரிவித்துள்ளாா்.