ஆத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ஆத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ பரிசோதனை முகாமினை பேரூராட்சி மன்ற தலைவர் AK.கமால்தீன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் பரிசோதனை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு BP, SUGAR மற்றும் TT தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: ஆத்தூர் இப்ராஹிம்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )