
தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆய்வு செய்தனர்
ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28.02.2024 அன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கவுள்ளத் தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, வ.உ.சி. துறைமுக தலைமைப் பொறியாளர் ரவிக்குமார் தலைமை இயந்திரப் பொறியாளர் சுரேஷ்பாபு, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
CATEGORIES மாவட்டம்