
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி கடந்த டிசம்பர் மாதம் 17 18 ஆகிய இருநாட்களில் பெய்த எதிர்பாராத கனமழையால் மாநகர பகுதி மட்டுமின்றி புறநகர் பகுதியும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டடு வௌ்ளம் சூழ்ந்தன. தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் கால்வாய் சாலை சீரமைக்கும் பணியும் புதிதாக பல பகுதிகளில் கால்வாய் தார்சாலைகள் பேவர்பிளாக் சாலைகள் அமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி சூழற்சி முறையில் மேயர் அதிகாாிகள் ஆய்வு மேற்கொண்டு நல்லமுறையில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஓப்பந்ததாரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி, ஆனணயர் மதுபாலன், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர். மக்களின் கோாிக்கைகளை முழுமையாக செய்து கொடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பொியசாமி உறுதியளித்தார்.
உடன் செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன், உதவி ஆணையர் சேகர், மாநகராட்சி சுகாதாரகுழு தலைவர் சுரேஷ்குமார், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.