
தூத்துக்குடி ஆத்தூரில், டாஸ்மாக் கடையில் பணம் கொடுக்காமல் தகராறு செய்து மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி கைது
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் அருகேயுள்ள கீரனூரை சேர்ந்தவர் சுந்தர் வேல் மகன் கிருஷ்ணகுமார் (வயது 40) அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட இணை செயலாளராகவும், ஆத்தூர் 18-வது வார்டு செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய மதுபாட்டிலுக்கு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், பணம் கேட்ட விற்பனையாளரான ஏரல் மார்க்கெட் தெருவைச் சேர்ந்த சண்முகவேலாயுதம் மகன் சேர்மராஜதுரை (வயது 51) என்பவரை அவதூறான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதைகுறித்து சேர்மத்துரை கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வக்குமார் வழக்குப்பதிந்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.
ஓசியில் மதுபாட்டில் கேட்டு கொடுக்காததால் விற்பனையாளரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி பற்றி அப்பகுதியில் சலசலப்பாக பேசப்பட்டு வருகிறது.