
காயல்பட்டினத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணி
. திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024யை முன்னிட்டு வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்தும், 100 சதவிகிதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிமை திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
இந்தப் பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காயல்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தனியார் வங்கி வரை சென்று முடிந்தது.
நிகழ்வில், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் பிரேம கீதா, தேர்தல் பிரிவு உதவியாளர் இளங்கோ ஜெகன் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: திருச்செந்தூர் சதீஷ்