2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி மற்றும் கட்டுப்பாடுகள்- தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ்குமார் அறிவித்தார்

2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி மற்றும் கட்டுப்பாடுகள்- தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ்குமார் அறிவித்தார்


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ந்தேதி மக்களவை தேர்தல் நடைபெறும்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும்.

வேட்புமனு தாக்கல் தொடக்கம் மார்ச் 20-ம் தேதி
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27
வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை மார்ச் 28.
வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 30

26 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.

கட்டுப்பாடுகள் என்னென்ன.?.

ட்ரோன் மூலம் எல்லைகள் பாதுகாக்கப்படும்.

சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்யலாம் ஆனால் போலி செய்திகளை பரப்ப கூடாது.

பணம், பொருள், மதுவிநியோகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படும்.

சமூக விரோதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை பாயும்.

ஹெலிகாப்டர்கள், தனி விமானங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்படும்

ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபடவேண்டும்.

மத ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது.

விளம்பரங்களை நம்பத் தகுந்த செய்தியாக முயற்சிக்கக் கூடாது.

தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும்.

தேர்தல் பரப்புரையில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தக் கூடாது என தலைமை தேர்தல் ஆணைய ராஜூவ்குமார் அறிவித்தார்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )