
மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் பிறந்தநாள் – தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணியினர் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதியில் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் பார்வையற்றோர் காப்பகம், முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாநகரில் புகழ் பெற்ற ஸ்தலங்களான பெரிய மாதா கோவில், சிவன்கோவில், பெரிய பள்ளிவாசல் அருகில் இருந்த முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும், தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை செயலாளரும், மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்ற செயலாளருமான வழக்கறிஞர் பால்துரை தலைமையில், மட்டக்கடை சகிலன் ஏற்பாட்டின் கீழ் லூசியா இல்லத்தில் மாணவ, மாணவியருடன் கேக் வெட்டியும், மதிய உணவும் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் பாரி ஏற்பாட்டின் கீழ் சிலுவைப்பட்டி பார்வையற்றோர் கருணை இல்லத்தில் உதயநிதி ஜீஸ் பார்க் உரிமையாளர் ஜஸ்டின் தலைமையில் கேக் வெட்டியும், மதிய உணவுகளும் வழங்கப்பட்டது.
திமுக பிரமுகர் பொன்சேகர் ஏற்பாட்டின் கீழ் கூட்டம்புள்ளி அன்பு இல்லத்தில் காலை மற்றும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவர் ஆண்டு தோறும் இந்த மாணவ, மாணவிகளுடன் கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்ற துணை செயலாளர்
திருச்செந்தூர் சுரேஷ் தலைமையில், அருள்மிகு திருச்செந்தூர் சுப்ரமணி சுவாமி திருக்கோவிலில் ஜோயல் பெயரில் பாலாபிஷேகமும் மற்றும் அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது. மேலும், திருச்செந்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருடன் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் ஜீவா செவன்ஸ் கபடி அணியினருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் டி-ஷர்ட்டும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தனபால், சிவகுமார், சத்தியராஜ், உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்ற பொருளாளர் சேக்முகமது, மாவட்ட துணை செயலாளர் நடராஜன், நறபணி மன்ற மாநகர தலைவர் தளபதி முருகன், திமுக இளைஞரணியை சார்ந்த செந்தில், டான் இசக்கி, முத்தரசன், மாணிக்கபுரம் விஜய், காயல்பட்டினம் வேல்முருகன், திருச்செந்தூர் சரவண மணி, , அர்பின், அஜன், பிரவீன் மற்றும் திமுக இளைஞரணி உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் என ஏராளமானோர் பெரும் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.