
தூத்துக்குடியில் 5 இடங்களில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஓவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஓவ்வொரு பகுதிகளிலும் தங்களுக்கு தேவையான கோாிக்கைகளை முன்வைத்தும் மனுக்களாகவும் அளித்து வந்தனர். மாநகாில் சில பகுதிகளில் பழைய மின்மாற்றிகளை மாற்றி புதிய மின்மாற்றிகளும் பல பகுதிகளில் மின் அழுத்தம் குறைவாக இருப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதால் புதிய மின்மாற்றிகள் அமைத்து தரவேண்டும் என்ற கோாிக்கை வைத்ததையடுத்து அதை அதிகாாிகள் கவனத்திற்கு எடுத்துச்சென்று தமிழ்நாடு மின்சார வாாியம் மூலம் கணேஷ்நகர் என்ஜிஓ காலணி 2வது தெரு மேற்கு கிரேஸ் நகா் வள்ளிநாயகபுரம் சக்திநகர் ஆகிய பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, ஜெயசீலி, ராஜதுரை, சுயம்பு, ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, முக்கையா, சிங்கராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மற்றும் கருணா, மணி, அல்பட், மின்வாாிய அதிகாாிகள் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.