மாப்பிள்ளை யூரணியில்  சாலைகள் அமைக்கும் பணி தீவிரம் – ஊராட்சி மன்ற தலைவர்  சரவணக்குமார் ஆய்வு

மாப்பிள்ளை யூரணியில் சாலைகள் அமைக்கும் பணி தீவிரம் – ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் முழுமையாக சேதமடைந்தன.
இதனால் ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் , வாகன ஓட்டிகள்
பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர் . இதற்கு ஒரு முழுமையான தீர்வு கிடைக்கும் வகையில் சேதமடைந்துள்ள சாலை பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க
8 கோடியே 80 லட்சம்
மதிப்பீட்டில் 128 சாலைகள் அமைப்பதற்கான ஓதுக்கிய நிதியிலிருந்து பணிகளை துரிதப்படுத்த மாப்பிள்ளையூரணி குமரன்நகாில் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் முன்னிலையில்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தார். இந்த கிராம பஞ்சாயத்துகளில் தீவிரமாக நடைபெற்று வரும். சாலை பணிகளை தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார்
நேரில் பார்வையிட்டு
அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஒப்பந்தக்காரர்களிடம் தரமாகவும் விரைவாகவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என
கேட்டுக்கொண்டார்.
அதில் 68 சாலைகளும் 60 பேவர் பிளாக் சாலைகளும் அமைக்கும் பணி தொடங்கப்பட்டன.

இந்நிலையில்
சாலை பணிகளை பஞ்சாயத்து தலைவர் அதிரடியாக ஆய்வு மேற்கொள்வது. மகிழ்ச்சி ஏற்படுகிறது என பகுதி பொதுமக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள். பெரும் மழையால் பாதிக்கப்பட்ட
சாலை பணிகளை நேரில் நின்று
தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்
பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்
செயல்பாடு பாராட்டுக்குரியது என பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் மனதார பாராட்டி வருகின்றனர். இந்த அதிரடி ஆய்வின்போது
தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன்,
ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கௌதம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )