தேவரின விரோத போக்கை கடைபிடிக்கும் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தலில் படுதோல்வியடைய செய்ய வேண்டும்- பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா தேவர் மக்களுக்கு வலியுறுத்தல்

தேவரின விரோத போக்கை கடைபிடிக்கும் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தலில் படுதோல்வியடைய செய்ய வேண்டும்- பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா தேவர் மக்களுக்கு வலியுறுத்தல்

தூத்துக்குடி பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அணைத்து மாவட்ட செயலாளர்கள் அவசரக்கூட்டம் பசும்பொன் நகாில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தலைவர் இசக்கிராஜா தலைமையில் நடைபெற்றது.

தேனி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருெநல்வேலி, கன்னியாகுமாி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை, ஆகிய மாவட்டங்களில் உள்ள வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் போட்டியிடவில்லை. மூக்குலத்தோாின் அரசியல் அதிகாரத்தை அழித்து தொடர்ந்து தேவரின் விரோத போக்கை கடைபிடித்து 10.5 சதவீத இடஓதுக்கீட்டில் துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமியை வருகின்ற பாரளுமன்ற தோ்தலில் படுதோல்வியடைய செய்வது வாக்கு கேட்க வரும் கட்சிகளிடம் கள்ளர், மறவர், அகமுடையா் ஆகியோரை தேவாினம் என அறிவிக்க வலியுறுத்துவது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவாின் பெயரை வைக்க சொல்லி வேட்பாளர்களை வலியுறுத்துவது, தென் மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகளை தொடங்கி ஜாதி பேதம் இல்லாமல் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க அரசு வலியுறுத்துவது, தமிழகத்தில் ஜாதி ரீதியாக போடப்படும் வன்கொடுமை சட்டத்தினை ரத்து செய்யுமாறு வேட்பாளர்களிடம் வலியுறுத்துவது, உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் மாடசாமிதேவர், மாநில செயலாளர் நம்பிக்குமார், கன்னியாகுமாி ரமேஷ்பாண்டியன், தென் மண்டல செயலாளர் பேச்சிமணி பாண்டியன், உள்பட பல மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )