
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி சார்பாக 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி சார்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தூத்துக்குடி சின்னத்துரை அன் கோ வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு தலைமை தாங்கினார். தூத்துக்குடி சின்னத்துரை அன் கோ பொறுப்பாளர் ஹரிராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வாக்காளர்கள் தங்களது ஓட்டுரிமையை பணத்திற்காக விற்கக் கூடாது அவ்வாறு விற்பனை செய்தால் வரும் காலங்களில் தங்களிடம் எதுவும் மிஞ்சாது என்பதை மாணவர்கள் கலை நிகழ்ச்சி மூலம் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்தினர்.
முன்னதாக கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கலை நிகழ்ச்சி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றது.