எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்து பணியாற்ற வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன்

எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்து பணியாற்ற வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் அனைவரும் அதற்கு பணியாற்ற வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் பேசினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கான வழிவகைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் ஊமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் உள்ளிட்ட இந்திய கூட்டணியின் நிர்வாகிகள் பேசியதையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் அமைப்பு அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோர் கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் தளபதியார் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். இந்தியா கூட்டணி இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்று தமிழகம் புதுச்சோய் உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று நமக்கு வேட்பாளராக கனிமொழியை தலைவர் அறிவித்தார். நாம் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அதிலும் குறிப்பாக ஓடிய அரசு தமிழகத்திற்கு எதிராக கொண்டு வந்த திட்டங்கள் சட்டங்கள் எல்லாம் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என்பதனால் மக்களுக்கு வீடுதோறும் சென்று சோகமாக இருக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது நமக்கு முக்கியம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தற்போது ஓன்றிய அரசு தான் செய்வதாக சொல்லிக்கொள்வது மட்டுமின்றி விளம்பரப்படுத்தப்படுகிறது. இதையெல்லாம் நாம் இணைந்து அம்பலப்படுத்த வேண்டும் திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சமத்துவம் பெற்று அனைவரும் சமநிலையுடன் வாழ வேண்டும் என்று ஓவ்வொரு திட்டங்களையும் பார்த்து தமிழக முதலமைச்சர் தமிழக மக்கள் நலன் கருதி செயல்படுத்தி வருகிறார். இன்னும் 30 நாட்களுக்கு நமது கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த பணிகளை ஓதுக்கி விட்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பொியசாமி, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அணி அமைப்பாளர் சூர்யா, கருணா, மணி, உள்ளிட்டவர்களும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜீனன், ராஜா, மாநகர செயலாளர் முத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேக், மதிமுக மாநில வௌியீட்டு அணி செயலாளர் நக்கீரன் மாநகர செயலாளர் முருகபூபதி. , இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாராஜன், விடுதலை சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட செயலாளர் கணேசன், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் காயல் முருகேசன், ஆதி தமிழர்கட்சி மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், திராவிடன் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் சமுத்திரகனி, தமிழக வாழ்வுயிமை கட்சி மாவட்ட துணைத்தலைவர் சாதிக்பாட்ஷா, பொருளாளர் இப்ராஹிம், வாகன ஓட்டுநர் அணி தலைவர் முத்துகணேஷ், இளைஞர் அணி செயலாளர் யோவான், மாநகர துணை செயலாளர் ஜான்பாஷா, செயற்குழு உறுப்பினர் முகம்மது சாதிக், தேசிய வாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் சையது அலி, பொருளாளர் முத்துச்செல்வன், சிறுத்தை கட்சி மாவட்ட துணைச்செயலாளர் மாயிமுத்து, செயற்குழு உறுப்பினர் சிறுத்தை குமார், செய்தி தொடர்பாளர் செல்வக்குமார், நிர்வாகிகள் அந்தோணிசாமி, பிரபாவளவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் நன்றியுரை கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )