
சமூகவலைதளங்களில் பரவும் வேட்பாளர் பட்டியல் போலி – தமிழக பா.ஜ.க அறிவிப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூகவலைதளங்களில் ஒரு பட்டியலில் பரவியது.
அதில், தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், கரூர் தொகுதியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி தொகுதியில் விஜயதரணி, தூத்துக்குடி தொகுதியில் நடிகை ராதிகா, கோவை தொகுதியில் ஏ.பி.முருகானந்தம், திருநெல்வேலி தொகுதியில் நயினார் பாலாஜி உள்பட 11 தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த பட்டியல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் என்று பரவும் அந்த பட்டியல் போலியானது என்று தமிழக பா.ஜ.க. தங்களின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது.
CATEGORIES அரசியல்