
எதிர்கட்சியினர் திமுக மீது கூறும் தவறான குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும்- வழக்கறிஞர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர செயலாளர் ஆனந்தசேரகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர்இளம்பாிதி முன்னிலை வகித்தார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை வழங்கி ேபசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியாாின் ஆட்சியில் செய்த சாதனைகளையும், வழக்கறிஞர்களுக்கு செய்த உதவிகளையும் முழுமையாக மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தல் காலமாக இருப்பதால் தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளிலும வழக்கறிஞர்கள் நல்லமுறையில் களப்பணிகள் ஆற்றவேண்டும். அதே நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். எதிர்கட்சிகள் செய்கின்ற தவறை தேர்தல் அதிகாாிகள் கவனத்திற்கும் எனக்கும் கொண்டு வரவேண்டும். திமுகவில் இருக்கின்ற 23 அணிகளில் வழக்கறிஞர் அணியின் பங்கு முக்கியம் என்பதை உணர்ந்து எதிர்கட்சியினர் திமுக மீது கூறும் தவறான குற்றச்சாட்டுகளையும் தேவையில்லாத பதிவுகளுக்கும் விமர்சனங்களுக்கும் உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் வகையில் நீங்கள் அனைவரும் ஓற்றுமையாக பணியாற்றி கனிமொழி எம்.பியின் அபார வெற்றிக்கு உழைக்க வேண்டும் எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் டெபாசிட் இழக்க வேண்டும் சில பணிகளின் போது நீங்கள் உங்களுக்குாிய உடையுடன் சென்றால் மாியாதையும் கிடைக்கும் கழக வழக்கறிஞர் என்பதும் தொியும் அந்த சந்தர்ப்பத்தையும் நீங்கள் பயன்படுத்திக்கொண்டு பணியாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் நாகராஜன், துணைத்தலைவர் அழகர்சாமி, துணை அமைப்பாளர்கள் பிரபு, மகேந்திரகுமார், வேல்முத்து, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபாியேல்ராஜ், மாலாதேவி, மாநகர வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜன் பாபு, துணைத்தலைவர் ஜேசுராஜாதயான், அமைப்பாளர் ரூபஸ் அமிர்தராஜ், துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, அந்தோணி செல்வதிலக், செல்வலட்சுமி, அஜித், மணிகண்டன், பாலசுப்பிரமணியன் மற்றும் வக்கீல்கள் அசோக், சீனிவாசன், சதீஷ்குமாா், சாமிநாதன், கிறிஸ்டோபர் விஜயராஜ், பிரவீன்குமார், முனிஸ்வாி, ராஜேந்திரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கருணா, மணி, அல்பட், உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.