தூத்துக்குடியில் நடிகர் விஜய் கட்சியினர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடியில் நடிகர் விஜய் கட்சியினர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி தமிழ் திரைப்படத்துறையில் நடிகராக அறிமுகமாகி இளைய தலைமுறையினரை கவர்ந்து நடிகராக வலம் வந்த விஜய் மக்கள் நல இயக்கம் என்ற பெயாில் மன்றமாக இயங்கி வந்தது. சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயாில் புதிய கட்சியை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் நியமணம் செய்து உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கட்சி ஆரம்பித்த பின்னர் மத்திய அரசு கொண்டுவந்த குடியுாிமை சட்டம் அறிவிப்பை எதிா்த்து முதல் அறிக்கையை வௌியிட்டு எதிர்ப்பு தொிவித்திருந்தார்.

இந்நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 2வது வார்டு முத்தம்மாள் காலணி, பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் முத்துராஜ், ஜீடு, ராஜேஷ்வர், அய்யனார், உள்ளிட்டோர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றத்துடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு முழுமையாக பணியாற்றுங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு பதவிகள் தேடி வரும் என்று தொிவித்தார்.

மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட் உடனிருந்தனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )