தூத்துக்குடியில் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்காத மாமனாரை அடித்து கொன்ற மருமகன் கைது

தூத்துக்குடியில் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்காத மாமனாரை அடித்து கொன்ற மருமகன் கைது

தூத்துக்குடி மறவன் மடம் திரவியபுரம் பகுதியை சேர்ந்தவர் இருதயமரியான் மகன் இருதய மணி, இவரது மகள் விண்ணரசிக்கும், தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ஆனந்த் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் கொண்டனர். இந்நிலையில், ஆனந்த் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக குடித்துவிட்டு மனைவியுடன் தொடர்ந்து தகராறு செய்து அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து கடந்த ஒரு ஆண்டாக தந்தை இருதயமணியின் வீட்டில் விண்ணரசி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாமனார் வீட்டிற்கு சென்ற ஆனந்த் தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மாமனார் இருதயமணி தனது மகளை அனுப்பி வைக்க மறுத்துள்ளார். மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்காத ஆத்திரத்தில் இருந்த ஆனந்த் நேற்று இரவு மாமனார் இருதயமணி வீட்டு பின்புறம் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது கம்பால் அடித்து கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாமனார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மருமகன் அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் துறையினர் இருதயமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த மருமகன் ஆனந்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )