கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மன நல திட்டம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பாக கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், தலைமை வகித்து மன நலம் சார்பாக பேசினார்,மன நல சமூக பணியாளர் பெரியசாமி  வரவேற்புரை வழங்கினார், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன் ராஜா முன்னிலை வகித்தார், மன நல மருத்துவர் ஜோஸ்வா சிறப்புரை ஆற்றினார்,

விபத்தை தடுக்கும் பொருட்டு மன அழுத்தத்துடன்,மற்றும் குடிபோதை, போதை பொருட்கள், உபயோகிக்காமல் வாகனங்களை இயக்கவும் மற்றும் இரவு நேரங்களில் கண் விழித்து வாகனங்களை ஓட்டாமல் இருக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார், மேலும் துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டது, இதைத்தொடர்ந்து மனநல ஆலோசனை உதவி எண் 9488044723 பொது மக்களுக்கு வழங்கப்பட்டது,

இந்நிகழ்வில் உரிமம் பெறுபவர்கள், மற்றும் புதுப்பிக்க வந்தவர்கள், வாகனங்களுக்கு தகுதிச் சான்று மற்றும் புதிய வாகனம் பதிவு செய்ய வந்தவர்கள் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் மேற்பார்வையாளர் மாடசாமி கலந்து கொண்டனர். மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் நன்றி உரையிற்றினார்.

செய்தியாளர் – அருணாச்சலம்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )