
கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் சமத்துவபுரம் மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் சிறப்பாக வரும் கோவில்பட்டி நகர சுமை ஏற்றி இறக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் அப்பகுதியில் வரும் வாகனங்களில் இருந்து வரும் பொருட்களை ஏற்றி இறக்கி வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு தரப்பினர் இவர்கள் பணிக்கு இடையூறு செய்து வருவது மட்டுமின்றி, இவர்களின் சங்க அலுவலகத்தையும் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகவும், தங்கள் பணிக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு செய்துள்ள சங்கத்தின் அலுவலகத்தை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதை போன்று விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் சமத்துவபுரம் மக்கள் தங்களுக்கு அரசு கட்டிக் கொடுத்துள்ள வீடுகள் புன்செய் நிலம் இருப்பதாகவும், அதனை கிராம கணக்கில் நத்தம் குடியிருப்பு என்றும் மாற்றி தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.
கோவில்பட்டி நிருபர்- முத்துக்குமார்