
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – 250கிராம் கஞ்சா பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெத்தேல் பின்புறம் உள்ள ரெயில்வே சுரங்க பால பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் துரைப்பாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்த 250கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்- முத்துக்குமார்
CATEGORIES மாவட்டம்