திருச்செந்தூரில் மருத்துவமனை அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது – இருசக்கர வாகனம் மீட்பு

திருச்செந்தூரில் மருத்துவமனை அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது – இருசக்கர வாகனம் மீட்பு

  • திருச்செந்தூரில் மருத்துவமனை அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது – இருசக்கர வாகனம் மீட்ப

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் முத்துநகரை சேர்ந்த முத்துசாமி மகன் குருசாமி (61) என்பவர் நேற்று (11.01.2024) திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து குருசாமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோ நகரை சேர்ந்த சந்தியாகு மகன் வினித் (30) என்பவர் மேற்படி குருசாமியின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன்  மற்றும் போலீசார் எதிரி வினித்தை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 60,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வினித் மீது ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், குளச்சல் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 5, வழக்குகளும், மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )