
வாங்கிய புதிய மொபைல் ஒரு வாரத்தில் பழுது – புதிய மொபைல் மற்றும் 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சார்ந்த கீதா என்பவர் அங்குள்ள விற்பனையாளரிடம் மொபைல் வாங்கியுள்ளார். மொபைலில் குறைபாடு அல்லது பழுது 3 மாதங்களுக்குள் ஏற்பட்டால் வேறு புது மொபைல் மாற்றித் தருவதாகவும் ஓராண்டு வரை எவ்வித கட்டணமுமின்றி பழுது நீக்கித் தருவதாகவும் உறுதி அளித்தார்கள். ஆனால் வாங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே மொபைல் பழுதடைந்து விட்டது. இதை சரி செய்து தர கடைக்காரரிடம் கொடுத்தேன்.ஒரு மாதம் கழித்து மொபைல் ரிப்பேர் செய்யப்பட்டு விட்டது எனக்கூறி என்னிடம் கொடுத்தார்கள். ஆனால் அது மறுபடியும் சரியாக செயல்படவில்லை.
மொபைலின் உற்பத்திலேயே குறைபாடு உள்ளதால் மன உளைச்சலுக்கு ஆளான கீதா உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழுதான மொபைலுக்கு பதில் புதிய மொபைல் அல்லது அதற்காக செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 3,055, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 30,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 35,000 ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.