
தூத்துக்குடி மாநகராட்சி 36வது வார்டு பகுதியில் தார்சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேயரிடம் மனு
தூத்துக்குடி மாநகராட்சி 36 வது வார்டுக்கு உட்பட்ட ராமசாமிபுரத்தில் தார்சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிழை உறுப்பினர் நாகராஜ் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதியில் விரைவில் தார் சாலை மற்றும் வடியால் வசதி செய்து தரப்படும் என உறுதி கூறினார்.
நிகழ்வில் மாநகர செயலாளர் முத்து, கிளைச் செயலாளர் மனோகரன், மாநகர குழு உறுப்பினர் காஸ்ட்ரோ, கிளை உறுப்பினர்கள் வேல்முருகன், சதாசிவம், முருகன், அனுசியா, ஜான்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
CATEGORIES மாவட்டம்