தூத்துக்குடி வ.உ.சி  கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி VOC கல்லூரியில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி மற்றும் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுங்கத்துறை கூடுதல் ஆணையர் வரலட்சுமி மற்றும் சுங்கத்துறை உதவி ஆணையர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு போதை பொருளால் ஏற்படும் தீங்குகளையும் அதைப் பற்றிய விழிப்புணர்களை பற்றியும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வ.உ.சி கல்லுரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )