
சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மின் கம்பத்தில் பணியிலிருந்த தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் அற்புதமணி(52). இவர் சாத்தான்குளம் அருகிலுள்ள நடுவக்குறிச்சி துணை மின் அலுவலகத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் விநாயகர் கோவில் தெருவில் மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் உயிரிழந்த நிலையில் அவர் மின் கம்பத்தில் தொடங்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தட்டார்மடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுத்தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.